Friday, August 7, 2009

மலையாள நடிகர் முரளி மரணம் (He did the role of Prithvi's dad in Veeralipattu)


மலையாள நடிகர் முரளி நேற்று திடீரென மரணமடைந்தார். அவருக்கு வயது 55.
1979ல் சினிமாவில் நடிக்க தொடங்கிய முரளி குறுகிய காலத்தில் மலையாள சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக உயர்ந்தார். நான்குமுறை மாநில் அரசு வழங்கும் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றவர் முரளி. ஒருமுறை சிறந்த துணை நடிகருக்கான விருதும் இவருக்கு கிடைத்தது. 2002ல் சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் தனது சிறப்பான நடிப்பால் வென்றெடுத்தார்.

தமிழில் முரளியை அறிமுகப்படுத்தியவர் அழகம் பெருமாள். அவரது டும் டும் டும் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்தார். சரணின் ஜெமினி, அமீ‌ரீன் ராம், வெற்றிமாறனின் பொல்லாதவன் ஆகிய படங்களில் முரளி வெளிப்படுத்திய நடிப்பு தமிழ் ரசிகர்களால் என்றும் மறக்க முடியாதது.

நீ‌ரிழிவு நோயால் அவதிப்பட்டு வந்த முரளிக்கு கடந்த செவ்வாய்க்கிழமை நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் திருவனந்தபுரத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முரளிக்கு மீண்டும் நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இரவு 8.20 மணிக்கு அவரது உயிர் பி‌ரிந்தது. முரளிக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.

**** மறைந்த நடிகர் முரளிக்கு நமது ஆழ்ந்த அஞ்சலிகள் ****

No comments:

Post a Comment