Tuesday, August 4, 2009

மணிரத்னம் கைவிட்ட காளைச் சண்டை


ராவண் படத்தில் மணிரத்னம் சேர்க்க விரும்பிய காளைச் சண்டை இடம்பெறப் போவதில்லை. விலங்குகள் நல வா‌ரியத்துடன் ஏற்பட்ட கசப்பைத் தொடர்ந்து இந்த கனத்த முடிவை அவர் எடுத்துள்ளார்.
கேரள வனப்பகுதியில் நடந்த படப்பிடிப்பில் யானை ஒன்று மதம் பிடித்ததோடு யானைப் பாகனையும் கொன்றது. இதைத் தொடர்ந்து விலங்குகள் நல வா‌ரியம் பல கட்டுப்பாடுகளை ராவண் யூனிட் மீது திணித்தது. யானைகளை வைத்து படப்பிடிப்பு நடத்த முறைப்படி மணிரத்னம் அனுமதி வாங்கவில்லை என்று அது குற்றம்சாட்டியது.

மேலும், இந்த விவகாரத்தில் ச‌ரியான விளக்கம் அளிக்காதபட்சத்தில் காளை போன்ற விலங்குகளை வைத்து படப்பிடிப்பு நடத்த முன்பு அளித்திருந்த அனுமதியை மறுப‌ரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் எனவும் பயமுறுத்தியது.

இதனைத் தொடர்ந்து படத்தில் தான் வைக்க விரும்பிய காளைச் சண்டையை படமாக்கப் போவதில்லை என மணிரத்னம் முடிவெடுத்துள்ளார். படப்பிடிப்புக் குழுவும் கேரளாவிலிருந்து ஊட்டிக்கு ஷிப்டாகியுள்ளது. இன்று முதல் கேரள வனப்பகுதியில் எடுத்த காட்சிகளின் கண்டினியூட்டி காட்சிகள் ஊட்டியில் படமாக்கப்படுகின்றன.

ஊட்டி என்றால் பிரச்சனையில்லை. தமிழ்நாடு. கலையை, கலைஞர்களை நேசிப்பவர் ஆட்சி செய்கிறார். இடையூறு வந்தாலும் அவை காலைப் பனியாக ஆவியாகிவிடும். தை‌ரியமாக தான் நினைத்ததை மணிரத்னம் படமாக்கலாம்.

Aazeek

No comments:

Post a Comment