Monday, August 31, 2009

காவ்யாவுக்கு குவியும் வாய்ப்புகள்


திருமணமாகி ஐந்தே மாதத்தில் இல்லற வாழ்க்கையில் சிக்கல் ஏற்பட்டு கணவரை பிரிந்துள்ள நடிகை காவ்யா மாதவன் மீண்டும் சினிமாவில் நடிக்க தயாராகி விட்டார். அவருக்கு வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன. காவ்யாவுக்கும், நிஷல் என்ற டாக்டருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. குடும்பத்தில் ஏற்பட்ட சிக்கல்களால் இல்லற வாழ்க்கை விவாகரத்து வரை சென்றுள்ளது. இந்நிலையில் காவ்யா மாத‌வனைத் தேடி ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன. இதையடுத்து கதை கேட்கும் பணியில் தீவிரமாக இறங்கிய அம்மணி, மேஜர் ரவி இயக்கும் புதிய படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார்.படத்தில் காவ்யா ப்ரித்விராஜின் ஜோடியாக நடிக்கிறார்.

SOURCE : DINAMALAR

No comments:

Post a Comment