Friday, July 24, 2009

நினைத்தாலே இனிக்கும்! ஆடியோ ரிலீஸில் கமல்!!



கமல் நடித்த கல்யாணராமன் படத்தை இயக்கிய ஜி.என்.ரங்கராஜனின் வாரிசு ஜி.என்.ஆர் குமரவேலன். ஜெமினி பிலிம் சர்க்கியூட் பேனரில் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருக்கும் படம் நினைத்தாலே இனிக்கும். பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவில் விஜய் ஆண்டனியின் இசையில் பிருத்விராஜ், ஷகதி, பிரியாமணி, கார்த்திக்குமார் உள்ளிட்ட நட்சத்திரங்களுடன் கே.பாக்யராஜ் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கும் இந்தப்படத்தின் ஆடியோ ரிலீஸீக்கு கமல் வந்தாலே ஆயிற்று என ஒற்றைக்காலில் நின்று அதை சாதித்தும் காட்டியிருக்கிறார் இயக்குநர் ஜிஎன்ஆர்.குமரவேலன்! அதனால், பல நாட்கள் காத்திருந்து கமலின் டேட்ஸ் கிடைத்ததும் சமீபத்தில் சத்யம் திரையரங்கில் ஆடியோ ரிலீஸ் வைத்து அசத்தியது ஜெமினி பிலிம் சர்க்கியூட். கமலும், இயக்குநரின் அப்பாவுடன் கல்யாணராமன் பட சமயத்தில் தனக்கு இருந்த நெருக்கத்தையும் பயத்தையும் பாசத்தையும் மேடையில் சொல்லி விழாவிற்கு வந்தவர்களை விசிலடிக்க வைத்தார்.நினைத்தாலே இனித்தது கமலுக்கு குமரவேலனுக்கு மட்டுமல்ல விழாவிற்கு வந்திருந்த ரசிகர்களுக்கும் தான்!.

No comments:

Post a Comment