Tuesday, July 28, 2009

நினைத்தாலே இனிக்கும் முன்னோட்டம்


ஜெமினி பிலிம் சர்கியூட் தயாரிப்பில் விரைவில் வெளியாக உள்ள படம் நினைத்தாலே இனிக்கும். இப்படத்திற்கு திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கம் குமரவேலன். பெயரை கேட்டவுடன் தமிழில் ரஜினி கமல் இணைந்து நடித்து சக்கை போடு போட்ட நினைத்தாலே இனிக்கும் படத்தின் ரீமேக் என்று நினைத்து விடாதீர்கள். பிருத்விராஜ், நரேன், ஜெய்சூர்யா, காவியா மாதவன் ஆகியோர் நடித்து மலையாளத்தில் பெறும் வெற்றியை பெற்ற கிளாஸ்மேட்ஸ் படத்தின் ரீமேக் தான் நினைத்தாலே இனி்க்கும். ரீமேக்கில் பிருத்விராஜ் மீ்ண்டும் நடிக்கிறார்.

நரேன், ஜெய்சூர்யா நடித்த கதாபாத்திரங்களில் ஷக்தி, ஸ்ரீநாத் நடிக்கின்றனர். படத்திற்கு ஒளிப்பதிவு - பாலசுப்ரமணியம், இசை - விஜய் ஆண்டனி, எடிட்டிங் -ஸ்ரீதர் பிரசாத், கலை - ரெமியன், நடனம் - பிரசன்னா சுஜித் மற்றும் தினேஷ், சண்டைப் பயிற்சி - சூப்பர் சுப்புராயன், உடைகள் - மூர்த்தி, ஒப்பனை - ரவி, பாடல்கள்- அண்ணாமலை, கலைகுமார், பிரியன், ஷீபா மற்றும் பிரபா.

Aazeek

No comments:

Post a Comment