Saturday, October 31, 2009

லாலுடன் நடிக்க பிருத்விரா‌ஜ் மறுப்பு


மோகன்லாலுடன் நடிக்க மறுப்பு தெ‌ரிவித்திருக்கிறார் பிருத்விரா‌ஜ். அதனால் அவருக்குப் பதில் திலீப்பை ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
மலையாளத்தில் முன்னணி நடிகர்கள் இணைந்து நடிப்பது சாதாரண விஷயம். மோகன்லாலின் நரசிம்மா படத்தில் சின்ன வேடத்தில் நடித்திருப்பார் மம்முட்டி.

இயக்குனர் ஜோஷி கிறிஸ்டியன் பிரதர்ஸ் என்ற படத்தை இயக்குகிறார். இதில் ஹீரோ மோகன்லால். அவருடன் நடிக்க பிருத்விரா‌ஜிடம் கால்ஷீட் கேட்கப்பட்டிருந்தது. ஆனால், மோகன்லாலுடன் நடிக்க பிருத்விரா‌ஜ் மறுத்து விட்டார். தனி ஹீரோவாக நடித்து வருவதால் மோகன்லாலுடன் இணைந்து நடிக்க அவர் விரும்பவில்லை என கூறப்படுகிறது.

தற்போது பிருத்விக்குப் பதில் திலீப்பை ஒப்பந்தம் செய்து செய்திருக்கிறார்கள்.

Aazeek

No comments:

Post a Comment