Monday, October 12, 2009

ராவணன் படத்திலிருந்து நீக்கப்பட்ட பிபாஷா


ராவணன் படத்தில் நடித்துக் கொண்டிருந்த பிபாஷா திடீரென நீக்கப்பட்டுள்ளார். இதற்கான காரணம் என்னவென்று இயக்குனர் மணிரத்னம் தெரிவிக்கவில்லை. மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளம் நடிக்கும் ராவணன் படத்தில் சில வாரங்களுக்கு முன் திடீரென ஒப்பந்தம் செய்யப்பட்டார் நடிகை பிபாஷா பாசு. இவரை மண்டோதரியை பிரதிபலிக்கும் கதாபாத்திரத்திற்காக தேர்வு செய்தாராம் மணிரத்னம். இவரை வைத்து சில காட்சிகளும் படமாக்கப்பட்ட நிலையில், திடீரென நீக்கியுள்ளார் இயக்குனர். வழக்கம்போல் ஏன் இந்த நீக்கம் என்றும் அவர் காரணம் தெரிவிக்கவில்லை. யூனிட்டில் உள்ள ஒருவர் சொல்லித்தான் பிபாஷாவுக்கு விஷயம் தெரியுமாம். இதனால் பெரும் வருத்தத்தில் மூழ்கிவிட்ட பிபாஷா, தன்னுடைய பெரிய கனவு ஒன்று தகர்ந்துவிட்டதைப் போல உணர்வதாக கூறியுள்ளார்.

SOURCE : THINAMALAR

No comments:

Post a Comment