Friday, December 25, 2009

ரூ.60 லட்சத்தில் சென்னையில் பழநி செட்!


யோகி படத்தை தொடர்ந்து, டைரக்டர் சுப்பிரமணியம் சிவா இயக்கும் புதிய படம் சீடன். இந்த படத்திற்கான வேலைகளில் பிஸியாக இருக்கிறார் டைரக்டர் சுப்பிரமணியம் சிவா. ஜனவரி முதல் வாரத்தில் தொடங்கவிருக்கும் சீடன் படத்திற்காக சென்னையில் இருக்கும் ஸ்டூடியோ ஒன்றில் ரூ.60 லட்சம் செலவில் பழநி அடிவாரத்தில் இருக்கும் அரண்மனை வீடு போல், ஆர்ட் டைரக்டர் ‌ஜாக்சன் வடிவமைத்து வருகிறார். இதற்காக பல வீடுகளை மாடல்களாக வரைந்து ஒரு பெரிய டீமே வேலை பார்த்து இருக்கிறதாம்.

இந்தப் படத்தில் விசேஷம், நடிகர் தனுஷ் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதுதான். தனுஷ் போலவே இன்னும் சில பிரபல முகங்களும் படத்தில் தோன்றி சர்ப்ரைஸ் தரப்போகிறார்களாம்.

ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். பி.சி.ஸ்ரீராமிடம் அசிஸ்‌டண்ட்டாக இருந்து கேமரா பயிற்சி பெற்ற ஸ்ரீனி ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்தப் படத்தை இயக்க ஒப்புக் கொள்ளும் முன் சுப்ரமண்ய சிவாவுக்கு நிறைய ஹீரோ வாய்ப்புகள் வந்ததாம். ஆனால் அவற்றையெல்லாம் மறுத்துவிட்டாராம் சிவா.

Aazeek

No comments:

Post a Comment