Tuesday, November 17, 2009

ராவணன் சிறந்த கதை; எனக்கு தேசிய விருது கிடைக்கும் -விக்ரம்


நடிகர் விக்ரம் ஆந்திர வெள்ள நிவாரணத்துக்காக முதல் மந்திரியிடம் ரூ.15 லட்சம் நிதி அளித்தார். பின்னர் ஐதராபாத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆந்திர வெள்ள நிவாரணத்துக்கு நிதி திரட்ட நட்சத்திர கலை விழா நடந்த போது நான் காஷ்மீரில் செல்வராகவன் இயக்கும் படப்பிடிப்பில் இருந்தேன். அங்கு அதிக பனிப்பொழிவு இருந்தது. இடையில் வந்து விட்டு திரும்பபோக முடியாது. தெலுங்கு மக்கள் என் படத்துக்கு ஆதரவு தருகிறார்கள். ஆந்திர வெள்ளசேதத்தை பார்த்து வருத்தம் அடைந்தேன். எனவே தான் நேரில் வந்து நிவாரண நிதி வழங்கினேன்.

கந்தசாமி படத்துக்கு முன்பு வரை ஒவ்வொரு படத்துக்கும் நிறைய இடைவெளி இருந்தது. இனி அப்படி இருக்காது. ஆண்டுக்கு 2 படங்களில் நடிப்பேன். 2010-ல் நான் நடித்த மூன்று படங்கள் வரும்.

மணிரத்னம் இயக்கும் ராவணன், செல்வராகவன் இயக்கும் பெயரிடப்படாத படமொன்று மற்றும் 24 என்ற பெயரில் தயாராகும் படங்களில் நடித்து வருகிறேன். 24 என்ற படத்தை 13 பி என்ற படத்தை இயக்கிய விக்ரம்குமார் டைரக்டு செய்கிறார்.

ராவணன் படத்தில் நான் ராவணன் கேரக்டரில் நடிக்கிறேன். அழுத்தமான வேடம். இதில் எனக்கு தேசிய விருது கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த படம் தமிழ், இந்தியில் தயாராகிறது. தமிழில் ஐஸ்வர்யாராய் என் ஜோடியாக நடிக்கிறார். இந்தியில் எனது கேரக்டரில் அபிஷேக்பச்சன் நடிக்கிறார். தமிழில் அவர் நடித்த பாத்திரத்தை இந்தியில் நான் செய்கிறேன்.

செல்வராகவன் இயக்கும் படத்திலும் எனக்கு அற்புதமான கேரக்டர். நேரடி தெலுங்கு படமொன்றில் நடிக்கவும் ஆசை உள்ளது.

இவ்வாறு விக்ரம் கூறினார்.

Aazeek

No comments:

Post a Comment