Saturday, May 30, 2009

பிருதிவிராஜ் தன் காதல் பரிசாக ப்ரியாமணிக்கு கார் வாங்கிக் கொடுத்ததாக செய்திகள் வெளியாகின - ப்ரியாமணி புலம்பல்.........



‘ஒரு நடிகையா இருந்துட்டு என் சொந்த காசில ஒரு கார் கூட வாங்க முடியலை... என்ன கொடுமை சார் இது...’ என்று வருவோர் போவோரிடம் எல்லாம் புலம்பிக் கொண்டிருக்கிறார் ப்ரியாமணி. சமீபத்தில் ப்ரியாமணி இனோவா கார் ஒன்றை விலைக்கு வாங்கினார். ஆனால் நடிகர் பிருதிவிராஜ் தன் காதல் பரிசாக ப்ரியாமணிக்கு கார் வாங்கிக் கொடுத்ததாக செய்திகள் வெளியாகின. இதனால் மிகவும் நொந்து போயுள்ளார் ப்ரியாமணி. தனக்குத் தெரிந்தவர்களிடம் எல்லாம் ‘பிருதிவியுடன் காதல் என்று கிசுகிசு எழுதினார்கள்... இப்போது நான் என் சொந்த பணத்தில் வாங்கிய காரை அவர் எனக்கு பரிசாக கொடுத்தது என்று எழுதுகிறார்கள்... ஏன்தான் இப்படி எழுதுகிறார்களோ...’ என்று வேதனையுடன் சொல்கிறார் ப்ரியாமணி. நடிகைகள் எல்லாம் தனது அப்பா, அம்மா, அண்ணன், தம்பி என உறவினர்கள் பெயரில் கார், நிலம், வீடு என அனைத்தையும் வாங்குவதற்கான காரணம் இனியாவது ப்ரியாமணிக்கு புரிந்தால் சரி...

Aazeekmovies

No comments:

Post a Comment