Tuesday, May 5, 2009

பிருதிவிராஜ், நரேன் போன்றோருடன் ஜோடி சேர்ந்தபோது....... (மீரா ஜாஸ்மின்)


“ரன்” படத்தில் மாதவன் ஜோடியாக அறிமுகமானவர் மீராஜாஸ்மின். விஜய், அஜீத், ஷாம், ஸ்ரீகாந்த், பிரசன்னா, விஷால், தனுஷ், பரத் என இளம் ஹீரோக்களுடன் தொடர்ந்து ஜோடியாக நடித்தார்.மலையாளம், தெலுங்கு படங்களிலும் நடித்தார். சமீபத்திய படங்கள் பெரிதாக ஓடாததால் வாய்ப்புகள் குறைந்தன. இதையடுத்து புதுமுக நடிகர்களுடனும், வயதான ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார். “ஆதிநாராயணா” என்ற படத்தில் புதுமுக நடிகர் வெற்றி ஜோடியாக நடிக்கிறார். விஜயகாந்த் ஜோடியாக நடித்த மரியாதை படம் தற்போது ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கிறது. மலையாளத்தில் மம்முட்டி, மோகன்லால் என வயதான நடிகர்களுடன் நடித்துள்ளார். இதுபற்றி கேட்ட போது மீராஜாஸ்மின் கூறியதாவது:- கதைதான் முக்கியம். நல்ல கதையாக அமைந்தால் யாருடன் வேண்டுமானாலும் நடிப்பேன். இதனால் என் “இமேஜ்” போகாது. மலையாளத்தில் பிருதிவிராஜ், நரேன் போன்றோருடன் ஜோடி சேர்ந்தபோது அவர்கள் புதுமுக நடிகர்கள்தான். இப்போது நிறைய படங்களில் நடிக்கிறார்கள். எனவே புதுமுக ஹீரோக்களுடன் ஜோடி சேருவதால் எந்த பாதிப்பும் இல்லை. மரியாதை படத்தில் விஜயகாந்துடன் ஜோடி சேர்ந்து நடிக்கவும் தயக்கம் காட்டவில்லை. என் கேரக்டரை தான் முக்கியமாக பார்க்கிறேன். ஹீரோக்கள் வயதானவர்களா? வயது குறைந்தவர்களா? என்று சிந்திப்பது இல்லை.

Aazeekmovies

No comments:

Post a Comment